பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம்

தினமலர்  தினமலர்
பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம்

மும்பை : பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்­டன்ஸ் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. இவ்­வெ­ளி­யீடு, 20ல் துவங்கி, 22ம் தேதி முடி­வ­டை­கிறது. பங்கு ஒன்­றின் குறைந்­த­பட்ச விலை, 60 ரூபாய்; அதி­க­பட்ச விலை, 63 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் வாயி­லாக, 33.5 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்­துள்­ளது. பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, பன்­டோ­மத் கேப்­பி­டல் அட்­வை­சர்ஸ் நிறு­வ­னம் நிர்­வ­கிக்­கிறது.‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டப்­படும் நிதி­யில், 5 கோடி ரூபாய், துணை நிறு­வ­னத்­தின், சூரிய சக்தி வர்த்­த­கத்­திற்­கும்; மீத­முள்ள நிதி, நிறு­வன நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­படும்’ என, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­து உள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தின் பங்­கு­கள், மும்பை பங்­குச் சந்­தை­யின், சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரி­வில் பட்­டி­ய­லி­டப்­படும். பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்­டன்ஸ் நிறு­வ­னம், இரண்டு மற்­றும் மூன்று சக்­கர வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­திற்கு, உ.பி., மாநி­லம், ஆக்­ரா­வில், இரு தொழிற்­சா­லை­கள் உள்ளன.

மூலக்கதை