‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’

தினமலர்  தினமலர்
‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’

லண்டன் : ‘‘என் மகள் இஷா தான், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம் உரு­வாக கார­ணம்,’’ என, ‘ரிலை­யன்ஸ்’ குழும தலை­வர், முகேஷ் அம்­பானி, பெரு­மை­யு­டன் தெரி­வித்­துள்­ளார்.

லண்­ட­னில், ‘பைனான்­சி­யல் டைம்ஸ் ஆர்­சி­லர் மிட்­டல் போல்­டு­னஸ்’ அமைப்­பின், ‘மாற்­றத்­திற்கு வித்­திட்­டோர்’ விருது, முகேஷ் அம்­பா­னிக்கு வழங்­கப்­பட்­டது. இவ்­வி­ழா­வில், அவர் பேசி­ய­தா­வது: ரிலை­யன்ஸ் குழு­மம், 2016ல், ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வ­னம் மூலம், 3,100 கோடி டாலர் முத­லீட்­டில், தொலை தொடர்பு சேவை­யில் நுழைந்­தது. இரண்டே ஆண்­டு­களில், இத்­து­றை­யில், நான்­கா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

உல­க­ள­வில், மொபைல் போனில் படங்­கள், செய்­தி­கள் உள்­ளிட்ட, ‘டேட்டா’ எனப்­படும் தர­வு­களை பயன்­ப­டுத்­து­வ­தில், 155வது இடத்­தில் இருந்த இந்­தியா, ஆர்­ஜியோ வரு­கை­யால், தற்­போது முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது.

உல­கி­லேயே, ‘4ஜி எல்.டி.இ.,’ தொழில்­நுட்­பத்­தில், டேட்டா சேவையை மிகப் பெரிய அள­வில் வழங்­கும், ஒரே நிறு­வ­னம் என்ற சிறப்பை, ஆர்­ஜியோ பெற்று, இந்­தி­யா­வுக்கு பெருமை சேர்த்­துள்­ளது.இதற்கு, என் பிள்­ளை­கள், இஷா­வும், ஆகா­ஷும் தான் கார­ணம். அமெ­ரிக்க யேல் பல்­கலை மாண­வி­யான, இஷா, 2011ல், விடு­மு­றை­யில் வீட்­டுக்கு வந்­தார்.

அப்­போது அவர், பல்­க­லை­யில் ஒரு செயல் திட்­டத்தை சமர்ப்­பிக்க, வீட்­டின் இணைய வச­தியை பயன்­ப­டுத்­தி­னார். அதன் செயல்­பாட்­டில் அவ­ருக்கு கடும் அதி­ருப்தி ஏற்­பட்­டது; அதை என்­னி­டம் தெரி­வித்­தார். அப்­போது ஆகாஷ், ‘தொலை தொடர்பு என்­றாலே குரல் வழிச் சேவை என்­பது பழைய காலம். இனி, அனைத்து சேவை­களும் டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்­தில் தான் நடக்­கும்’ என்­றார்.

இந்த உரை­யா­டல்­கள் என்னை யோசிக்க வைத்­தன. அதன் விளை­வாக உரு­வா­னது தான், ஆர்­ஜியோ நிறு­வ­னம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை