பதினாறாம் வட்டத்தில் திருட்டு! - 100,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பதினாறாம் வட்டத்தில் திருட்டு!  100,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் ஒரு இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. 
 
பதினாறாம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் தரை தளத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் 100,000 தொடக்கம் 150,000 யூரோக்கள் வரை பெறுமதியுள்ள நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களால் தாம் மிரட்டப்பட்டதாக உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்தார். 
 
கொள்ளையிடப்பட்டதை உறுதி செய்துகொண்டிருக்கும் காவல்துறையினர், விரைவில் விசாரணைகளை ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை