அமெரிக்காவில் பாலம் இடிந்து 4 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் பாலம் இடிந்து 4 பேர் பலி

புளோரிடா: அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நேற்று பிற்பகல் புதிதாக நிறுவப்பட்ட நடைபாதை மேம்பாலம் ஒன்று உடைந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது.

இதனால் அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக ஒரு சிறிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மூலம் குறைந்தபட்சம் ஜந்து முதல் ஆறு வாகனங்கள் பாலத்தின் கீழே சிக்கின.

இதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.   950 டன் எடைகொண்ட இந்த பாலம் சரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்வது தடை செய்யப்பட்டது.
இது சம்பவம் குறித்து புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் ,’ மியாமி போலீஸ் உயர்அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்கள்.   இந்த சம்பவம் குறித்து பல்கலைகழக அதிகாரிகளிடம் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை