La Défense நிலையத்துக்குள் நுழைந்த மகிழுந்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
La Défense நிலையத்துக்குள் நுழைந்த மகிழுந்து!!

La Défense இல் மகிழுந்து ஒன்று தொடரூந்து நிலைய சுரங்கத்துக்குள் சென்று சிக்கிக்கொண்டது. வேகமான நடவடிக்கையால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. 
 
புதன்கிழமை இரவு, மகிழுந்து ஒன்று 
La Défense நிலக்கீழ் தொடரூந்து நிலைய சுரங்கத்துக்குள் 300 மீட்டர்கள் வரை பயணித்துள்ளது. T2 ட்ராம் வழி அருகே இந்த மகிழுந்து சிக்கிக்கொண்டது. மகிழுந்து சாரதி தான் தவறான பாதையில் பயணித்துள்ளதை அறிந்து உடனடியாக மகிழுந்தை திருப்பி வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால் மகிழுந்து தண்டவாளத்தோடு சிக்கிக்கொண்டது. இதனால் வேகமாக மகிழுந்தை விட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளார். 
 
SNCF பின்னர் சேவைகளை நிறுத்தி, மகிழுந்தை வெளியேற்றியதன் பின்னர் சேவை வழமைக்குத் திரும்பியது. மகிழுந்து சாரதி வழி தெரியாமல் இதற்குள் இறங்கியுள்ளார் என காவல்துறையினர் குறிபிட்டனர். ஆனால் சாரதி மது அருந்தியிருந்தாரா உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மூலக்கதை