பாலம் உடைந்து விழுந்து விபத்து: 10 பேர் உடல் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
பாலம் உடைந்து விழுந்து விபத்து: 10 பேர் உடல் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாதசாரிகளுக்கான பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் சிக்கி 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் இரண்டு பகுதிகளை இணைக்கும் நடை பாலமே உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இதில் பல வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் 10கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும், அதில் இருவர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
கடந்த சனிக்கிழமை குறித்த பாலத்தை நிறுவியதாகவும், குறித்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்த்து மாணவர்கள் விரைவாக கடந்து செல்லும் பொருட்டு பாலம் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
950 டன் எடை கொண்ட குறித்த பாலமானது உடைந்து விழுந்ததில் பல வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சம்பவம் நடந்த பகுதியில் தற்போது ஏராளமான அவசர உதவி குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் 14 மில்லியன் டொலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குறித்த பாலமானது இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை