சாத்தையாறு அணை தூர்வாரும் பணி இழுத்தடிப்பு:ஆட்சி மாற்றத்தால் பாழாகி வருகிறது

தினமலர்  தினமலர்
சாத்தையாறு அணை தூர்வாரும் பணி இழுத்தடிப்பு:ஆட்சி மாற்றத்தால் பாழாகி வருகிறது

மதுரை/:மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை துார்வாரும் பணி ஆட்சி மாற்றத்தால் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.இந்த அணை 29 அடி நீர்மட்டம் கொண்டது. சிறுமலையின் சிற்றோடைகள் நீராதாரமாக உள்ளது. அணையின் உபரி நீர் எர்ரம்பட்டி, கோணப்பட்டி, அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட பத்து கண்மாய்களை நிரப்பும். இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
அணையின் மையத்தில் உள்ள 'குட்டை கரடு' எனும் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றை அகற்றி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை அதிகரித்து, துார்வாரி, சுற்றுலாத்தலமாக மாற்ற தி.மு.க., அரசு 2010ல் நடவடிக்கை எடுத்தது. பின் வந்த அ.தி.மு.க., ஆட்சி அணையை துார்வார நடவடிக்கை இல்லை. மழையின்றி கடந்தாண்டு அணை வறண்டது. கடந்த நவ.,ல் பருவமழையால் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்தது.
எனினும் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலவில்லை. தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதால் துார்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

மூலக்கதை