ஐபிஎல் ஏலம் நடைபெற்ற சமயத்திலும் உலக கோப்பையில்தான் கவனம் செலுத்தினோம்: தொடர் நாயகன் சுப்மான் கில் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் ஏலம் நடைபெற்ற சமயத்திலும் உலக கோப்பையில்தான் கவனம் செலுத்தினோம்: தொடர் நாயகன் சுப்மான் கில் பேட்டி

மும்பை: யு-19 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் (5 இன்னிங்ஸ்) விளையாடிய இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மான் கில் மொத்தம் 372 ரன்களை விளாசினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 102 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் தனக்கு அதிகம் உதவி செய்துள்ளதாக சுப்மான் கில் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், ‘’பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும்போது யுவி பாஜி (யுவராஜ் சிங்) நிறைய வழிகாட்டல்களை கொடுத்தார். களத்தில் உள்ளேயும், வெளியேயும் உள்ள பல அம்சங்களை பற்றி அவர் கூறினார்.

நிறைய டிப்ஸ்கள் கொடுத்ததுடன், என்னுடன் இணைந்து பேட்டிங்கும் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி அழுத்தம் நிறைந்ததாக இருந்தது.

அந்த போட்டியில் நமது தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர். ஆனால் அதன்பின்பு சில விக்கெட்களை இழக்க நேரிட்டது.

 எனவே இறுதிவரை நின்று விளையாடும்படி ராகுல் டிராவிட் சார் கூறினார்.

அந்த போட்டியில் அன்குல் ராய் உடனான எனது பார்ட்னர்ஷிப் சிறப்பானது. ஐபிஎல் ஏலத்திற்கு ஒரு நாள் முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான கால் இறுதி போட்டியில் விளையாடினோம்.

இதனால் சோர்வாக இருந்தோம். மறுநாள் எழுந்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்திருப்பதை (₹1. 8 கோடிக்கு) அறிந்து கொண்டேன்.

ஆனால் அந்த நேரத்தில் நான் ஐபிஎல் பற்றி நினைக்கவில்லை. உலக கோப்பை தொடரில்தான் கவனம் செலுத்தி கொண்டிருந்தோம்’’ என்றார்.


.

மூலக்கதை