ஐபிஎல் நேரம் மீண்டும் மாற்றம்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் நேரம் மீண்டும் மாற்றம்?

மும்பை: ஐபிஎல் 11வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. வழக்கமாக ஐபிஎல் தொடரின் போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும்.

ஒரு நாளில் 2 போட்டிகள் என்றால், மாலை 4 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 8 மணிக்கு மற்றொரு போட்டியும் தொடங்கும். ஆனால் 11வது சீசனில் இந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி மாலை 4 மணி போட்டிகள் 1. 30 மணி நேரம் பின்னதாக மாலை 5. 30 மணிக்கும், இரவு 8 மணி போட்டிகள் ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நேர மாற்றத்திற்கு பெரும்பாலான ஐபிஎல் அணி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனால் நேரம் மீண்டும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

.

மூலக்கதை