ஆட்டம் காட்டும் அதிபர் டொனால்டு டிரம்ப் :இந்தியாவின் ஏற்றுமதி மானியத்தால் பாதிப்பு:உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா புகார்

தினமலர்  தினமலர்
ஆட்டம் காட்டும் அதிபர் டொனால்டு டிரம்ப் :இந்தியாவின் ஏற்றுமதி மானியத்தால் பாதிப்பு:உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா புகார்

வாஷிங்டன்:இந்­தி­யா­வின் ஏற்றுமதி மானிய திட்டங்­க­ளால், தங்கள் நாட்டு தொழி­லா­ளர்­கள் பாதிக்­கப்­படு­வ­தாக, உலக வர்த்­தக அமைப்­பிடம், அமெ­ரிக்கா முறை­யிட்டு உள்­ளது.இது குறித்து, உலக வர்த்­தக அமைப்­பி­டம், அமெ­ரிக்க வர்த்­த­கத் துறை பிர­தி­நிதி, லைட்­திசர் அளித்­துள்ள மனு:இந்­தியா, குறைந்­த­பட்சம் ஆறு திட்­டங்­களின் கீழ், ஏற்­று­ம­தி­யா­ளர்­களுக்கு, அதிக மானி­யம், வரி விலக்கு உள்­ளிட்ட சலு­கை­களை வழங்­கு­கிறது.
உருக்கு பொருட்­கள், மருந்து, ரசா­ய­னம், ஜவுளி, ஆயத்த ஆடை, தக­வல் தொழில்­நுட்ப சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்றை, ஏற்­று­மதி செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு, பல சலு­கை­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.
இந்த வகை­யில், ஆண்­டுக்கு, 700 கோடி டால­ருக்­கும் அதி­க­மான சலு­கை­களை, இந்­திய நிறு­வ­னங்­கள் பெறு­கின்றன. அத­னால், இந்­தி­யா­வால், அமெ­ரிக்­கா­விற்கு, குறைந்த விலை­யில் பொருட்­களை ஏற்­று­மதி செய்ய முடி­கிறது.
இது, அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளை­யும், அவற்றை சார்ந்­துள்ள தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்­தை­யும் பாதிக்­கிறது.ஏற்­று­மதி நாடு­களின் மானி­யங்­கள், இறக்­கு­மதி செய்­யும் நாடு­களை பாதிக்­காத வகை­யில், நியா­ய­மா­க­வும், பரஸ்­ப­ரம் சம­மா­க­வும் இருக்க வேண்­டும்.எனி­னும் இதில், வள­ரும் நாடு­கள் சில­வற்­றுக்கு, தற்­கா­லிக விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. அந்த நாடு­கள், குறிப்­பிட்ட பொரு­ளா­தார குறி­யீட்டை எட்­டும் வரை, சற்றுதாரா­ள­மாக மானி­யம் வழங்­க­லாம்.துவக்­கத்­தில், இந்த பிரிவில் இருந்த இந்தியா, நிர்­ண­யிக்­கப்­பட்ட பொரு­ளா­தார குறி­யீட்டை, 2015ல் தாண்­டி­யது.
இதை­ய­டுத்து, மானிய வரம்­பிற்கு அளிக்­கப்­பட்ட விலக்­கும், தானா­கவே காலா­வ­தி­யாகி விட்டது.இருந்த போதி­லும், இந்தியா இன்­னும் ஏற்றுமதி மானி­யங்­களை திரும்பப் பெறா­மல் உள்ளது.அது­மட்­டு­மின்றி, மானியங்­களை மேலும் விரி­வு­படுத்தி உள்­ளது.
உதா­ர­ண­மாக, எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தின் கீழ், ஏற்­று­மதி மானி­யத்­திற்கு தகுதி உள்ள பொருட்­களின் எண்­ணிக்­கையை, இரு மடங்கு உயர்த்தி, 8,000 ஆக அதிகரித்து உள்­ளது.சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களின் ஏற்­று­மதி, 2,000 சத­வீ­தத்­தில் இருந்து, 2017ல், 6,000 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­விற்­கான, இந்­தி­யா­வின் ஏற்­று­ம­தி­யில், இந்த மண்­ட­லங்­களின் பங்கு, 30 சத­வீ­த­மாக உள்ளது.
அது­போல, இ.ஓ.யு.எஸ்., இ.எச்.டி.பி.எஸ்., உள்­ளிட்ட மானிய திட்டங்­களும், குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை கண்­டுள்ளன. அத­னால், இந்­தியா, ஏற்­று­மதி மானி­யங்­களை நீக்க வேண்­டும்.உலக வர்த்­தக அமைப்பு விதி­க­ளின்­படி, இப்­பிரச்னை­யில், இந்­தி­யா­வும், அமெ­ரிக்­கா­வும், முதலில் பேச்சு நடத்தும். அதில் தீர்வு காணா­விட்டால், உலக வர்த்­தக அமைப்­பின் குறை தீர்ப்­பா­யத்­தில், அமெ­ரிக்கா முறை­யி­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
விசா கட்­டுப்­பாடு, உருக்கு, அலு­மி­னி­யம் இறக்­கு­மதி வரி உயர்வு ஆகி­ய­வற்­று­டன், தற்­போது, மானிய பிரச்­னையை, அதி­பர் டிரம்ப் கிளப்பி இருப்­பது, இந்­தி­யா­விற்கு தலை­வ­லியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.
பயணம்அமெ­ரிக்கா கிளப்­பி­யுள்ள மானிய விவ­காரம் குறித்து, அந்­நாட்டு வர்த்­தக பிர­தி­நி­தி­க­ளு­டன் பேச்சு நடத்த, இந்­திய வெளி­யு­ற­வுத் துறை செயலர், விஜய் கோகலே, வாஷிங்­டன் சென்­று உள்­ளார்.

மூலக்கதை