மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது ஆஸி.

தினகரன்  தினகரன்

வதோதரா : இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 2வது போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. முதல் போட்டியில் சதம் அடித்த துவக்க வீராங்கனை போல்டன் 84, பெர்ரி ஆட்டமிழக்காமல் 70*, மோனே 56 ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா மட்டுமே அதிரடியாக ரன் சேர்த்தார். இவர் 53 பந்தில் 1 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 67 ரன் விளாசி ஆட்டமிழந்தார். மந்தனா வெளியேறிய பின் இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. நமது அணி 49.2 ஓவரில் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.

மூலக்கதை