சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி முதல் போட்டியில் இந்தியா-பாக். மோதல்

தினகரன்  தினகரன்

பிரிடா : சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், முதல் லீக் இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன.சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நெதர்லாந்தின் பிரிடாவில் வரும் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு லீக் போட்டியில் மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 அணிகள் பைனலுக்கு முன்னேறும்.இதில், ஜூன் 23ம் தேதி நடக்கும் முதல் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜூன் 24ம் தேதி 2வது லீக் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினாவையும், ஜூன் 27ம் தேதி 3வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், ஜூன் 30ம் தேதி நெதர்லாந்தையும் சந்திக்கிறது.

மூலக்கதை