சாம்பியன்ஸ் லீக் கால்பந்து சதம் அடித்தார் லியோனல் மெஸ்ஸி

தினகரன்  தினகரன்

பார்சிலோனா : செல்சியாவுக்கு எதிரான போட்டியில் 2 கோல் அடித்து பார்சிலோனா அணியை கால் இறுதிக்கு அழைத்துச் சென்ற நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது 100வது கோலையும் அடித்து சாதித்தார். சாம்பியன்ஸ் லீக் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய 2ம் கட்ட போட்டியில் பார்சிலோனா, செல்சியா அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இப்போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வெல்லும் அணியே கால் இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு அணி வீரர்களும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய 129வது வினாடியிலேயே (3வது நிமிடம்) மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். சக வீரர் ஒஸ்மானே 20வது நிமிடத்தில் கோல் அடித்தார். 63வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்த மெஸ்ஸி, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 100வது கோல் அடிக்கும் 2வது வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். இத்தொடரில் 123 போட்டியில் விளையாடியுள்ள மெஸ்ஸி 100 கோல்களை அடித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 152 போட்டியில் 117 கோல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்ஸின் அபார ஆட்டத்தால் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வென்றது. இதன் மூலம், 2 கட்ட போட்டிகளையும் சேர்த்து, 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா கால் இறுதிக்கு முன்னேறியது.

மூலக்கதை