மக்களின் வாங்கும் திறன் குறைந்ததா?காய்கறிகளின் விலை குறைவு பின்னணி

தினமலர்  தினமலர்
மக்களின் வாங்கும் திறன் குறைந்ததா?காய்கறிகளின் விலை குறைவு பின்னணி

மக்­களின் வாங்­கும் திறன் குறைந்­துள்­ள­தால், காய்­கறி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை, கணி­ச­மாக குறைந்­துள்­ளது.
‘யானை வரும் பின்னே, மணி­யோசை வரும் முன்னே’ என்­பது போல், கோடை துவங்­கும் முன்பே, காய்­க­றி­களின் விலை உச்­சத்தை தொடு­வது வழக்­கம்.ஆனால், 40 ஆண்டு கால வர­லாற்­றி­லேயே இல்­லாத அள­வுக்கு, தற்­போது காய்­க­றி­களின் விலை அதிரடி­யாக குறைந்­துள்ளது. அதே போல், உணவு தானிய விலை­யும், கணி­ச­மாக குறைந்­துள்­ளது.
கடந்­தாண்­டு­களில், 1 கிலோ முருங்­கைக்­காய், 120 ரூபாய்க்கு விற்­கப்­பட்­டது. தற்­போது, 20 ரூபாய்க்கு குறைந்­துள்­ளது. பெரும்­பா­லான காய்­க­றி­களின் விலை, கிலோ, 10 – 20 ரூபாய் வரை­யி­லேயே விற்கப்­ப­டு­கின்றன.
‘மக்­க­ளி­டையே வாங்­கும் திறன் குறைந்­த­தா­லேயே, விலை வீழ்ச்­சி­ய­டைந்­து உள்ளது’ என, கோயம்­பேடு காய்­கறி சந்தை விற்­ப­னை­யாளர்­களின் ஆலோ­ச­கர், சவுந்­திரரா­சன் கூறி­னார்.
அவர் கூறி­ய­தாவது:கடந்த, 40 ஆண்டு கால வர­லாற்­றில்,இந்­த­ள­வுக்கு விலை வீழ்ச்­சி­ய­டைந்­த­தில்லை. பொது­வாக, கோடை காலத்­தில், காய்­கறி விலை உய­ரும். ஆனால், இந்­தாண்டு விலை குறைந்­துள்­ளது.விளைச்­சல் அதி­க­ரிப்­பால், தற்­போது விலை குறைந்­தது என்­பது சரி­யான கார­ணம் அல்ல. மக்­க­ளி­டையே வாங்­கும் திறன் குறைந்­த­தா­லேயே, இந்த விலை வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.– நமது நிருபர் –

மூலக்கதை