நாட்டின் பருத்தி இருப்பு 441.81 லட்சம் பொதி­கள்

தினமலர்  தினமலர்
நாட்டின் பருத்தி இருப்பு 441.81 லட்சம் பொதி­கள்

புதுடில்லி:‘‘நடப்பு அக்., – செப்., வரை­யி­லான பருத்தி பரு­வத்­தில், நாட்டின் மொத்த பருத்தி இருப்பு, 441.81 லட்சம் பொதி­க­ளாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது,’’ என, மத்­திய ஜவு­ளித் துறை இணை அமைச்­சர், அஜய் டாம்டா, பார்­லிமென்­டில் தெரி­வித்து உள்­ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது:நாட்­டில் தற்­போது, போது­மான அள­வுக்கு பருத்தி இருப்பு உள்ளது.உள்­நாட்டு பருத்தி பயன்­பாடு, 334 லட்­சம் பொதி­க­ளாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.நடப்பு, 2017 – 18 பருத்தி பரு­வத்­தில், முந்தைய கையி­ருப்பு, 47.81 லட்­சம் பொதி; உற்­பத்தி, 377 லட்­சம் பொதி; இறக்­கு­மதி, 17 லட்­சம் பொதி என, மொத்­தம், 441.81 லட்­சம் பருத்தி பொதி­கள் இருப்பு இருக்­கும்.மேலும், பருத்தி உற்பத்தி அதி­க­ரித்து வரு­வ­தால், நடப்பு பரு­வத்­தில், பருத்தி ஏற்­று­மதி, 15 சத­வீ­தம் ஏற்றம் கண்டு, 67 லட்­சம் பொதி­கள் என்­ற­ள­வில் இருக்­கும் என, மதிப்­பிடப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை