அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியது பள்ளியின் முன்னாள் மாணவன் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் நேற்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் அலறி அடித்து பள்ளி வளாகத்துக்குள் ஓடி வந்தனர்.

சுமார் 3 ஆயிரம் பேர் படிக்கும் அப்பள்ளியில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி வளாகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. உடனடியாக அவர்களை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கேள்விப்பட்டு பெற்றோர் அங்கு குவிந்தனர்.

இந்நிலையில், போலீசார் மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.



பள்ளியில் புகுந்து துப்பாக்கியால் சுட்டது பள்ளியின் முன்னாள் மாணவன் நிக்கோலஸ் குருஸ்(19) என்பது தெரியவந்தது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பள்ளியில் இருந்து சமீபத்தில்தான் மாணவன் நிக்கோலஸ் நீக்கப்பட்டான்.

இந்த ஆத்திரத்தில் அவன் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.   இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், சம்பவம் குறித்து புளோரிடா மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை