போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: சிரியாவில் நிவாரண பணிகளில் சிக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: சிரியாவில் நிவாரண பணிகளில் சிக்கல்

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. சிரிய அரசுக்கு ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது கடந்த 2 வாரமாக அரசு படைகள் தீவிர வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிக அதிகம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தினமும் 5 மணி நேரம் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக சிரிய அரசு அறிவித்தது. வான்வழி தாக்குதலின் தீவிரம் குறைந்தது.

இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழி தடம் இல்லை. தொண்டு நிறுவனங்களின் வாகனங்களும் அங்கு செல்ல முடியவில்லை.



மேலும் இரு தரப்பிலும் அவநம்பிக்கை இருப்பதால் கடந்த 3 நாட்களாக ஆங்காங்கு தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் நிவாரண உதவி வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பொது மக்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு வழி தடங்களில் ஏறிகுண்டு தாக்குதல் நடத்திவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

போர் நிறுத்த தீர்மானத்தை சிரியா மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

.

மூலக்கதை