90வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 4 விருதுகளை வென்றது ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
90வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 4 விருதுகளை வென்றது ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் தி ஷேப் ஆஃப் வாட்டர், சிறந்த படம், இயக்குனர் உள்பட 4 விருதுகளை தட்டிச் சென்றது. சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் இந்தி நடிகர் சஷிகபூருக்கு விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சினிமா உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இது 90வது ஆஸ்கர் விருது விழாவாகும்.

விழாவை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.

கில்லெர்மோ டெல் டெரோ இயக்கிய தி ஷேப் ஆஃப் வாட்டர் ஹாலிவுட் படம், கடந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் இதே படத்துக்காக அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் வென்றார். சிறந்த இயக்குனருக்கான விருதை இப்படம் கில்லெர்மோவுக்கு பெற்றுத் தந்தது.

4வதாக சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படம் வென்றது. கேட்டவுட் இவ்விருதை பெற்றார்.

மொத்தம் 13 விருது பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. அதில் 4 விருதுகளை தட்டிச் சென்றது.

இதற்கு அடுத்த படியாக புகழ் பெற்ற டைரக்டர் கிரிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படம் 3 விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருது கேரி ஓல்ட்மேனுக்கு டார்கெஸ்ட் ஹார் படத்துக்காக கிடைத்தது.



சிறந்த நடிகைக்கான விருது பிரான்சிஸ் மெக்டோர்மென்ட்டுக்கு த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட்ஸ் எப்பிங் படத்துக்காக வழங்கப்பட்டது. மற்ற விருதுகள் விவரம்: துணை நடிகை - அல்லிசென் ஜென்னி.

பின்னணி இசை - கோகோ படத்தில் ‘ரிமெம்பர் மி’ பாடல். ஒளிப்பதிவு - பிளெட் ரன்னர் 2049.

திரைக்கதை - ஜோர்டன் பீலே. தழுவல் திரைக்கதை - கால் மீ பை யுவர் நேம்.

எடிட்டிங் - டன்கிர்க். குறும்படம் - தி சைலன்ட் சைல்ட்.

ஆவணப் படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன்தி 405. விஷுவல் எபெக்ட்ஸ் - பிளேட் ரன்னர் 2049.

அனிமேஷன் படம் - கோகோ. வௌிநாட்டு படம் - சிலே.

சவுண்ட் மிக்ஸிங் - டன்கிர்க். சவுண்ட் எடிட்டிங் - டன்கிர்க்.



ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி
சமீபத்தில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் இந்தி நடிகர் சஷிகபூர், ஹாலிவுட் நடிகர் ரோஜர் முர்ரே உள்பட கடந்த ஆண்டில் மறைந்த முன்னணி கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்க ராக் பேண்ட் இசைக் குழுவை சேர்ந்த பியர்ல் ஜேம்ஸ் இசை நிகழ்ச்சி மூலம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


.

மூலக்கதை