உலகின் விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் எது தெரியுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
உலகின் விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் எது தெரியுமா?

உலகின் விலைவாசி அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

 
The Economist Intelligence Unit (EIU) என்னும் அமைப்பு உலகம் முழுவதிலுமுள்ள 133 நகரங்களில் 150 மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி உலகிலேயே அதிக விலைவாசி உள்ள நகரமாக சிங்கப்பூர் முதலிடத்தையும், சூரிச் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
சூரிச் நகரத்துடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்வது பாரீஸ் நகரம்.
 
அடுத்தடுத்த இடங்களில் Hong Kong மற்றும் Osloவும், Genevaவும் Seoulம் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
 
மேற்கு ஐரோப்பிய நகரங்கள் இன்னொரு முறை தர வரிசைப்பட்டியலில் முன்னணியில் நிற்கின்றன என்பது பத்தாண்டுகளாக கவனிக்கப்படவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
 
அடுத்த ஆய்வில் ஒரு புறம் ஆசிய நகரங்களாகிய சிங்கப்பூர், Hong Kong மற்றும் Seoul ஆகிய நகரங்களையும் மறுபுறம் ஐரோப்பிய நகரங்களாகிய பாரீஸ், சூரிச் மற்றும் Oslo ஆகிய நகரங்களையும் ஒப்பிட்டு நோக்கப்படும் என்று ஆய்வின் ஆசிரியரான Roxana Slavcheva தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில் பிரித்தானிய மற்றும் அமெரிக்க நகரங்களில் விலைவாசி குறைவாக உள்ளது. Damascus, Caracas மற்றும் Almaty ஆகிய நகரங்கள் மிகக் குறைந்த விலைவாசி உள்ள நகரங்களாக அறியப்பட்டுள்ளன.
 
ஆய்வின்படி அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள பல நகரங்களில் விலைவாசி குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மூலக்கதை