பிரெஞ்சுப் பயங்கரவாதி Maxime Hauchard உயிரிழப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சுப் பயங்கரவாதி Maxime Hauchard உயிரிழப்பு!!

உளவுத்துறை வெளியிட்ட தகவல்களின் படி, பிரெஞ்சுப் பயங்கரவாதி Maxime Hauchard உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது. 
 
தாயேஸ் பயங்கரவாதிகளில், மரண தண்டனையை நிறைவேற்றும் மிக கொடூரமான பிரெஞ்சு பயங்கரவாதி Maxime Hauchard உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு உளவுத்துறை தெரிவித்துள்ளது. 25 வயதுடைய குறித்த பயங்கரவாதிக்கு Abu Abdellah என மற்றுமொரு பெயரும் இருப்பதாகவும், பிரெஞ்சு மொழி பேசும் பயங்கரவாதிகளில் மிக முக்கியமானவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, பயங்கரவாதிகள் வெளியிட்ட பல்வேறு காணொளிகளில் இவன் தோன்றியிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Normandy நகரத்தை பூர்வீகமாக கொண்ட இவர், மதம் மாற்றப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, சிரியாவில் பயங்கரவாதிகளுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை