மீண்டும் பிரான்சை தாக்க வரும் கடும் குளிர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் பிரான்சை தாக்க வரும் கடும் குளிர்!!

கடந்த இரு வாரங்களுக்கு முன் பிரான்சில் நிலவிய கடுமையான குளிரைத் தொடர்ந்து, மீண்டும் இந்த வார இறுதியில் கடும் குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மிதமான வெயிலும் வெப்பமும் நிலவியதைத் தொடர்ந்து, இந்த வார இறுதி நாட்களில் மீண்டும் கடும் குளிரும், நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் பனிப்பொழிவும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் சில இடங்களில் பனிப்பொழி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 8° இல் இருந்து 12° வரை நிலவும் குளிர், சனிக்கிழமை காலை -2° வரை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னர் -12° வரை குளிர் நிலவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
பரிசுக்குள், -10° வரை குளிர் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை வரும் திங்கட்கிழமை காலநிலை இயல்புக்கு திரும்பும் எனவும், 5° இல் இருந்து 8° வரை வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை