ஜி.எஸ்.டி.,யால் மகிழும் பருப்பு வியாபாரிகள்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி.,யால் மகிழும் பருப்பு வியாபாரிகள்

சென்னை:மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், பருப்பு வகைகளின் விலை குறைந்து உள்ளதாக, சென்னை, கொத்தவால்சாவடி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, பருப்பு வியாபாரி, செந்தில் கூறியதாவது:கடந்த, 2015 - 17 வரை, உளுத்தம் பருப்பு, 100 கிலோ மூட்டை அதிகபட்சம், 16 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. தற்போது அதிகபட்ச விலை, 7,000 ரூபாய் மட்டுமே.இதனால், பருப்பு வகைகள், ஒரு கிலோ, 70 - 80 ரூபாயை தாண்டவில்லை. ஜி.எஸ்.டி., வந்த பின், 'வாட்' வரி இல்லாமல் போய்விட்டது.
மொத்தமாக இருப்பு வைத்து, விலையை ஏற்றும் போக்கும் குறைந்து விட்டது. .எஸ்.டி.,யில், ஒவ்வொரு மாதமும் இருப்பு காட்ட வேண்டிஉள்ளது.அதே நேரம், ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் வரை நடந்த வர்த்தகம், தற்போது பாதியாக குறைந்து விட்டதால், வருமான வரித்துறையில் இருந்து, பல வியாபாரிகளுக்கு, 'நோட்டீஸ்' வந்த வண்ணம் உள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்து, சில மாதங்களே ஆகிறது. போகப்போக, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் வர்த்தகம், மகிழ்ச்சியாகவே இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை