தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் தொழில் கொள்கை விரைவில்

தினமலர்  தினமலர்
தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் தொழில் கொள்கை விரைவில்

புதுடில்லி:''தற்போதுள்ள தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும், புதிய தொழில் கொள்கை, விரைவில் வெளியிடப்படும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
அவர், இந்திய நிர்வாகவியல் கூட்டமைப்பின் கருத்தரங்கில் பேசியதாவது:இந்தியா, நான்காவது தொழில் புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதில், சாதனங்கள் இடையிலான இணைய பயன்பாடு, ரோபோ, செயற்கை நுண்ணறிவு, மேகக் கணினி, அறிவார்ந்த கணினி உள்ளிட்ட, நவீன தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
இத்தகைய தொழில்நுட்பங்களுடன், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள், தற்போதுள்ள தொழிற்சாலைகளிலும் இடம் பெற வேண்டும்.இதற்காக, புதிய தொழில் கொள்கை வரைவறிக்கை உருவாக்கப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து, விரைவில், புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும். இக்கொள்கை, தற்போதுள்ள தொழிற்சாலைகளில், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, சந்தைப் போட்டியை சமாளிக்க உதவும். வரும் ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலரை எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை