பரிஸ் - மருத்துவமனையில் இருந்து 150,000 யூரோக்கள் மதிப்புள்ள மருந்துகள் திருட்டு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  மருத்துவமனையில் இருந்து 150,000 யூரோக்கள் மதிப்புள்ள மருந்துகள் திருட்டு!!

பரிசில் உள்ள Bichat மருத்துவமனையில் இருந்து 150,000 யூரோக்கள் மதிப்புள்ள மருந்துகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Bichat மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை வழக்கு பதியப்பட்டுள்ளது. பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, மருத்துவமனையில் இருந்து கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதியில் இருந்து மார்ச் 12 ஆம் திகதிக்குள் மூன்று தடவைகள் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மருந்தகத்தில் இருந்தும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்தும் மருந்துகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 
 
மேலும், திருடப்பட்ட மருந்துகள் எயிட்ஸ் பாலியல் தொற்றுநோய்க்கா பயன்படுத்தும் மருந்துகள் எனவும், மொத்த மதிப்பு 150,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை