மீண்டும் சவரன் ரூ.23,300 ஐ கடந்தது தங்கம் விலை

தினமலர்  தினமலர்
மீண்டும் சவரன் ரூ.23,300 ஐ கடந்தது தங்கம் விலை

சென்னை : கடந்த 2 நாட்களாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.23,300 க்கும் கீழாகவே இருந்து வந்தது. திருமண சீசன் சமயத்தில் இன்று (மார்ச் 14) மீண்டும் ரூ.23,300 ஐ கடந்துள்ளது வாடிக்கையாளர்களை கவலையடைய வைத்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 ம், கிராமுக்கு ரூ.19 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2916 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,190 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,328 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.41.70 ஆக உள்ளது.

மூலக்கதை