அதிக இழப்பை சந்தித்த பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா

தினமலர்  தினமலர்
அதிக இழப்பை சந்தித்த பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா

புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்­தியா, எம்.டி.என்.எல்., நிறு­வ­னங்­கள், 2016- – 17ம் நிதி­யாண்­டில், பெரும் இழப்பை சந்­தித்­துள்ளன.அதிக இழப்பை கண்ட, 10 பொதுத் துறை நிறு­வ­னங்­களில், இந்த மூன்று நிறு­வ­னங்­களின் பங்கு, 55.66 சத­வீ­த­மாக உள்­ளது.
அதே­ச­ம­யம், இதே நிதி­யாண்­டில், மொத்­தம், 257 பொதுத் துறை நிறு­வ­னங்­களின் நிகர லாபம், 11.7 சத­வீ­தம் உயர்ந்து, 1,14,239 கோடி­ ரூபாயில் இருந்து, 1,27,602 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது.அதிக லாப­மீட்­டிய, 10 நிறு­வ­னங்­களில், இந்­தி­யன் ஆயில் கார்ப்., ஓ.என்.ஜி.சி., கோல் இந்­தியா ஆகி­யவை, முறையே, 19.69 சத­வீ­தம், 18.45 சத­வீ­தம் மற்­றும், 14.94 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் முன்­ன­ணி­யில் உள்ளன.
லாப­மீட்­டிய, 174 நிறு­வ­னங்­களில், முதல் ,10 நிறு­வ­னங்­களின் பங்கு, 63.57 சத­வீ­த­மாக உள்­ளது. ஹிந்­துஸ்­தான் கேபிள், பி.எச்.இ.எல்., ஓ.என்.ஜி.சி., விதேஷ் ஆகி­யவை, இழப்­பில் இருந்து லாப பாதைக்கு திரும்­பி­யுள்ளன.பொதுத் துறை­யைச் சேர்ந்த, 82 நிறு­வ­னங்­களின் மொத்த இழப்­பில், 10 நிறு­வ­னங்­களின் பங்கு, 83.82 சத­வீ­தம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை