உரிமமின்றி போலி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் அரசு

விகடன்  விகடன்
உரிமமின்றி போலி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் அரசு

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமமின்றி விதை, நாற்றுகள் விற்பனை செய்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு இயக்குநர் கண்ணன் எச்சரித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், போலி விதைகள், மற்றும் நாற்றுகள் விற்பனை செய்து மேலும் விவசாயிகளை கடனாளியாக ஆக்கிகொண்டிருக்கிறார்கள். இதற்கு தீர்வு காண அதிகாரிகளும் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், விதை ஆய்வு இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விதை, நாற்றுகள் விற்பனை செய்பவர்கள் அரசு உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். விதை தடுப்புச் சட்டம், விதை கட்டுப்பாடு ஆணையம் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு  உரிமமின்றி விதை, நாற்றுக்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து பொது மக்கள் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். விதை விநியோக உரிமம் பெற விரும்புவோரின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் சொந்த இடம் எனில் வரி செலுத்திய ரசீது, வாடகை இடம் எனில் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் பத்திரம், ஆதார் அட்டை, கடையின் வரைபடம், அதன் போட்டோஸ் காப்பி மற்றும் 1,000 பணத்தை கருவூல ரசீது ஆகியவற்றை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணபிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை