நேபாள அதிபராக பித்யா தேவி மீண்டும் தேர்வு

தினமலர்  தினமலர்
நேபாள அதிபராக பித்யா தேவி மீண்டும் தேர்வு

காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தின் அதிபரான, பித்யா தேவி பண்டாரி, 56, மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். நேபாளத்தின் முதல் பெண் அதிபராக, பித்யா தேவி பண்டாரி உள்ளார். அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இடது கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளரான அவருக்கு, 39 ஆயிரத்து, 275 ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் வேட்பாளர், குமாரி லட்சுமி ராய்க்கு, 11 ஆயிரத்து,730 ஓட்டுகள் கிடைத்தன.

மூலக்கதை