கோபித்து சாப்பிடாமல் சென்ற கணவர்! வேதனையில் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்

விகடன்  விகடன்
கோபித்து சாப்பிடாமல் சென்ற கணவர்! வேதனையில் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்

 

சென்னையில் ஒன்றரை வயது மகனைக் கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்டார். 

சென்னை தரமணி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கணபதி. கூலித்தொழிலாளி. இவர் மனைவி சுமித்ரா. இவர்களுக்கு கிருஷ்வா என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. இந்தநிலையில் நேற்றிரவும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணபதி இன்று சாப்பிடாமல் வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த சுமித்ரா தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். அப்போது, குழந்தையையும் அநாதையாக விட்டுச்செல்ல அவருக்கு மனமில்லை.

இதனால், தன்னுடைய குழந்தையை முதலில் தூக்குப்போட்டு கொலை செய்தார். அதன்பிறகு குழந்தையின் அருகில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் சுமித்ராவின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையும் சுமித்ராவும் தூக்கில் தொங்குவது தெரிந்தது. இதையடுத்து, தரமணி போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று  இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர். சுமித்ராவின் இந்த விபரீத முடிவால் தரமணி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. 

 மனைவி, குழந்தை இறந்த தகவல் கேட்டு அங்கு வந்த கணபதி, கதறி அழுதார். தொடர்ந்து இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. இதனால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

மூலக்கதை