சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் சிக்கி 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி!

விகடன்  விகடன்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் சிக்கி 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி!

மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும், சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் 9 ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் சுகமா மாவட்டத்தில், கிஸ்தாமிலிருந்து பாலோடு பகுதி வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, மாவோயிஸ்ட்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்கும் இடையே, கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலில் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது  என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மூலக்கதை