ஏப்ரலில் நிர்மலா சீத்தாராமன் சீனா பயணம்

தினமலர்  தினமலர்
ஏப்ரலில் நிர்மலா சீத்தாராமன் சீனா பயணம்

புதுடில்லி: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் சீனா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீத்தாராமன் அளித்த பதிலில் ஏப்ரலி்ல் சீன பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றார். எனினும் சீன பயணத்தின் நோக்கம் குறித்து விரிவான பேட்டி அளிக்கவில்லை.
இது குறித்து தகவலறிந்தவட்டாரங்கள் கூறுகையில், சீனா செல்லும் நிர்மாலா சீத்தாராமன், தனது பயணத்தின் போது இந்தியா-சீனா இடையே டோக்லாம் எல்லையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த 73 நாள் பிரச்னை குறித்தும், இரு நாட்டு நல்லுறவு குறித்தும் அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசிப்பார். மேலும் வரும் ஜூன் மாதம் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு சீனாவில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். எனவே இதுவும் சீத்தாராமனின் சீன பயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலக்கதை