வெளிநாடு ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாடு ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை பெண்!

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சவூதியின் Buraidah பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சவூதி பிரஜை ஒருவர் குறித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்., பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
42 வயதுடைய பிரியங்கா ஜெயசங்கர் என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த சவூதி பிரஜை, தமது இல்லத்தில் வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டைமேற்கொண்டுள்ளார்.
 
கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் அல் ராஸ் (Al-Ras) வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது
 
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சவூதி பிரஜை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதுஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்வெளியிட்டுள்ளன.

மூலக்கதை