47 இண்டிகோ விமானங்கள் ரத்துக்குக் காரணமான இயந்திரக் கோளாறு!

விகடன்  விகடன்
47 இண்டிகோ விமானங்கள் ரத்துக்குக் காரணமான இயந்திரக் கோளாறு!

விமானத்தில் ஏற்படும் இயந்திரக் கோளாறு காரணமாக, 47 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், நடுவானில் விமானம் சென்றுகொண்டிருக்கும்
போது இயக்கமுடியாமல்போகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, 'A320 நியோ'
ரக 11 விமானங்களுக்கு, விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் இன்று தடை விதித்துள்ளது. நேற்று, மும்பையிலிருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அடுத்த 40 நிமிடங்களில் அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக, பிப்ரவரி மாதம் மட்டும் அதிக இண்டிகோ விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

எனவே, இன்று உள்நாட்டில் இயங்கும் 47 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக, இண்டிகோ நிறுவனம் அதன் அதிகாரபூர்வ
இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், கௌஹாத்தி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை