பேஸ்புக் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
பேஸ்புக் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் அனைவராலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பேஸ்புக் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
பேஸ்புக் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
 
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை முழுவதும் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை