கண்களை குத்தி குருடாக்கி கொண்ட இளம்பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
கண்களை குத்தி குருடாக்கி கொண்ட இளம்பெண்!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் கடவுளுக்காக தமது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த 20 வயதான Kaylee Muthart என்ற இளம்பெண் போதை மருந்து பழக்கத்தால் அவஸ்தை அனுபவித்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில் மத நம்பிக்கை மிகுந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தேவாலயத்தின் வெளியே தமது கண்களை சேதப்படுத்துவதை அந்த வழியாக சென்ற பலர் கண்டுள்ளனர்.
 
அதில் சிலர் இவரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனாலும் Muthart தமது கண்களை குருடாக்கியுள்ளார்.
 
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
 
கல்லறைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆத்மாக்களுக்காக, அவர்களை விடுவிக்க, தாம் தனது கண்களை கடவுளுக்கு தியாகம் செய்துள்ளதாக Muthart தெரிவித்துள்ளார்.
 
கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு கிடப்பதால் தான் உலகம் இருண்டு காணப்படுவதாகவும், அதனாலையே அழிவுகள் பெருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குடியிருப்பு திரும்பிய அவர் மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
 
போதை மருந்து பழக்கத்தில் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைவிடவும் வாழ்க்கை தற்போது மிகவும் அழகாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே தமது மகளுக்கு ஒரு வழிகாட்டும் நாயை வாங்குவதற்காக நிதி திரட்டும் பணியில் அவரது தாயார் ஈடுபட்டு வருகிறார்.

மூலக்கதை