பயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்பு

புதுடில்லி:இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான – ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, பிப்­ர­ வ­ரி­யில், 7.77 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2,75,329 ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 2,55,470 ஆக இருந்­தது.இதே காலத்­தில், கார் விற்­பனை, 3.7 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 1,72,737லிருந்து, 1,79,122 ஆக உயர்ந்­துள்­ளது. மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 26.48 சத­வீ­தம் அதி­க­ரித்து, 10,53,230 ஆக உள்­ளது.
மதிப்­பீட்டு மாதத்­தில், மொத்த இரு­சக்­கர வாகன விற்­பனை, 23.77 சத­வீ­தம் உயர்ந்து, 16,85,814 ஆக உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 13,62,043 லட்­ச­மாக இருந்­தது.வர்த்­தக வாகன விற்­பனை, பிப்­ர­வ­ரி­யில், 31.13 சத­வீ­தம் அதி­க­ரித்து, 87,777 ஆக உயர்ந்­துள்­ளது. அனைத்து பிரி­வு­க­ளி­லும், ஒட்­டு­மொத்த வாகன விற்­பனை, 22.77 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 17,19,806ல் இருந்து, 21,11,383ஆக வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை