விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள்

தினமலர்  தினமலர்
விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள்

பெரும்­பா­லான நிறு­வ­னங்கள் குறிப்­பிட்ட விடு­முறை நாட்­களை அனு­ம­தித்­தாலும், இந்­திய ஊழி­யர்கள் பெரும்­பா­லானோர், தயக்கம் கார­ண­மாக இந்த வாய்ப்பை முழு­வதும் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது இல்லை என, தெரிய வந்­துள்­ளது.
‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறு­வனம் நடத்­திய ஆய்வில், இந்­தி­யர்­களுக்கு ஆண்­டுக்கு, 17 நாட்கள் ஊதி­யத்­துடன் கூடிய விடு­முறை கிடைத்­தாலும், 30 சத­வீதம் பேர் விடு­முறை கோரு­வ­தற்­கான தைரி­யத்தை பெறு­வ­தில்லை என தெரிய வந்­துள்­ளது. விடு­முறை கார­ண­மாக வேலை பளு அதி­க­மா­கலாம் என, 42 சத­வீதம் பேர், அஞ்­சு­கின்­றனர். 26 சத­வீதம் பேர், விடு­முறை எடுக்க ஏற்ற வகையில் பொறுப்­பு­களை ஒப்­ப­டைக்க முடி­யாமல் அவ­திப்­படு­வ­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.
இரு வார கால விடு­முறை
அதி­ருப்­தியை உண்­டாக்­கலாம் அல்­லது அனு­மதி கிடைக்­காமல் போகலாம் என பலரும் கரு­து­கின்­றனர். 65 சத­வீதம் பேருக்கு மேல், விடு­முறை கால சலு­கையை முழு­வதும் பயன்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை