இந்த படத்திற்க்காக நிர்வாணமாக நடித்துள்ளாரா விஜய்சேதுபதி..!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்த படத்திற்க்காக நிர்வாணமாக நடித்துள்ளாரா விஜய்சேதுபதி..!

 நடிகர் விஜய்சேதுபதி புரியாத புதிர் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்ததாக அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

 
விஜய்சேதுபதி நடித்த புரியாதபுதிர் படம் எடுக்கப்பட்டு வெகுநாட்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப்படத்தில் வரும் மழைக்காட்சியில் விஜய்சேதுபதி நடித்திருந்த விதத்தைப்பற்றி அப்படதின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பகிர்ந்து கொண்டார். அதில்,‘விஜய்சேதுபதி மிகப்பெரிய நடிகராக உயர்ந்து வருகிறார்.
 
அப்படி இருந்தும் காட்சிக்கு என்ன தேவையோ அதன்படி மறுப்பேதும் சொல்லாமல் நடித்துக் கொடுப்பார். புரியாத புதிர் படத்தில் ஒரு மழைக்காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என கூறினேன். மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட ரெயின் கோட் அணிந்திருப்பார்.
 
மழையில் அவர் நனைய நனைய அது சாயம் இறங்கி கண்ணாடி கவர் போலாகி அவர் நிர்வாணமாய் நிற்பது போல தெரியும். இதில் உண்மையாகவே அவர் நிர்வாணமாக நடித்திருந்தார்’எனத் தெரிவித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் நடிக்க இருக்கும் பெண் கேரக்டர் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 96 படத்தில் அவர் 96 வயது முதியவராக நடித்து வருகிறார். அதே போல் ஒருநாள் பார்த்து சொல்றேன் படத்தில் அவர் பழங்குடியின தலைவராக மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார்.

மூலக்கதை