இலங்கையில் இருந்து பேஸ்புக் ஊடாக ஏமாற்றப்பட்ட பிரித்தானிய பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் இருந்து பேஸ்புக் ஊடாக ஏமாற்றப்பட்ட பிரித்தானிய பெண்!

பணக் கொள்ளையில் ஈடுப்பட்ட நைஜீரிய பிரஜைகள் இருவரையும் இலங்கை பிரஜையொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் சட்டவிரோத பணக்கொள்ளை வியாபாரத்தை இலங்கையிலிருந்தே செயற்படுத்தி, கொண்டு வந்துள்ளனர்.
 
இதில் ஒருவர் பம்பலப்பிட்டியில் வைத்தும் மற்றவர் அத்திட்டிய பிரதேசத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட இரு நைஜீரிய பிரஜைகளும் பிரித்தானியாவில் வசித்து வரும் ஒரு பெண்ணை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
குறித்த இருவரும் பேஸ்புக் மூலம் பிரித்தானிய பெண் ஒருவருடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் குறித்த பெண்ணிடமுள்ள பணத்தை இலங்கையிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய உள்ள விடயத்தை அறிந்து கொண்டு அப்பெண்ணிடமுள்ள பணத்தை கொள்ளையடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 
 
மேலும் கைது செய்யப்பட்ட இலங்கையர் குறித்த இரு நைஜீரிய பிரஜைகளுக்கும் முச்சக்கரவண்டி மூலம் உதவி செய்த சாரதியென்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை