டெல்லிப் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தேர்தல் முடிவுகள்!

விகடன்  விகடன்
டெல்லிப் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தேர்தல் முடிவுகள்!

டெல்லிப் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் பொதுக்குழு (DUSU) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

டெல்லிப் பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சார்ந்து இயங்கும் கல்லூரிகளுக்கான மாணவ அமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் இந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து பொதுக்குழுவின் 4 பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்பான இந்திய தேசிய மாணவ அமைப்பின் (NSUI) சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ராக்கி துஷேத் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) சார்பில் போட்டியிட்ட குணல் சேராவத்தை விட 175 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே போலத் துணைத்தலைவர் பதவியிலும் காங்கிரஸின் மாணவ அமைப்பின் வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார்.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ.பி.வி.பி-யின் மகமேதா நகர் என்.எஸ்.யு. ஐ-யின் மீனாக்ஷி மீனாவைவிட 322 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல இணைச் செயலாளர் பதவியில் ஏ.பி.வி.பி-யின் உமா சங்கர் என்.எஸ்.யு-வின் அவினாஷ் யாதவை விட 342 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு பொதுவுக்குழுவின் அனைத்துப் பதவியிலும் பா.ஜ.க மாணவ அமைப்பே வெற்றி பெற்றிருந்தனர். அந்த அளவில் இந்த ஆண்டுத் தேர்தல் இவர்களுக்குப் பின்னடைவாகவே அமைந்துவிட்டது.

மூலக்கதை