நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப் 4வது முறையாக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப் 4வது முறையாக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு

திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் வழக்கில் 2 மாதங்களுக்கு முன்பு நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   ஜாமீன்கோரி முதலில் அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் 2 முறை கேரளா உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.

3  முறையும் இவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனிடையே தந்தையின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கெடுக்க  கடந்த 6ம் தேதி 2 மணி நேரம் பரோலில் விடுவிக்கப் பட்டார்.

இந்த நிலையில்  அவர் 4வது முறையாக இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளார். இவருக்கு ஜாமீன் கொடுக்க போலீசார் எதிர்ப்பு  தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே நடிகர் திலீப்பின் நண்பரும், நடிகருமான நாதிர்ஷா கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று  வருகிறது. நாதிர்ஷாவுக்கு முன்ஜாமீன் கொடுக்க போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன் ஜாமீன் நிராகரிப்பட்டால் உடனே அவரை கைது  செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை கடத்தல் சம்பவத்தில் நாதிர்ஷாவிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணம் வாங்கியதாக பல்சர் சுனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   போலீசார் பல்சர் சுனிலை கட்டாயப்படுத்தி கூற வைத்துள்ளதாக நாதிர்ஷா தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை