ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 23ம்தேதி கொடியேற்றம், 27ம்தேதி கருடசேவை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 23ம்தேதி கொடியேற்றம், 27ம்தேதி கருடசேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 23ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 23ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 22ம்தேதி  அங்குரார்ப்பணம், 23ம் தேதி மாலை 5. 45 மணியளவில் மீன லக்னத்தில் அஷ்டதிக் பாலகர்களை நியமித்து பிரம்மோற்சவத்தை காண வரும்  தேவதைகளை வரவேற்கும் ஐதீகப்படி மஞ்சள் துணியில் கருடன் உருவம் வரையப்பட்ட பிரம்மோற்சவ கொடியை வேத மந்திரங்கள் முழங்க தங்க  கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.

அன்று இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

2ம் நாள் (24ம்தேதி) காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 3ம் நாள் (25ம்தேதி) காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம்,  4ம் நாள் (26ம் தேதி) கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபாள வாகனம், 5ம்நாள் (27ம் தேதி) காலை மோகினி அவதாரத்தில் கிருஷ்ணருடன் வீதி  உலாவும் அன்றிரவு முக்கிய உற்சகமான தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருகிறார். 6ம்நாள் (28ம்தேதி) காலை அனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணிக்கு தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 7ம்நாள் (29ம்தேதி) காலை சூரிய  பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடக்கிறது.

8ம்நாள் (30ம்தேதி) காலை மகா ரதத்திலும் (மரத்தேர்), இரவு குதிரை (அஷ்வ) வாகனத்திலும், 9ம்நாள் (அக். 1ம் தேதி) காலை 6 மணி முதல் 9 மணி  வரை சக்கரத்தாழ்வாருக்கும் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கும் சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரியும் நடக்கிறது.

இரவு பிரம்மோற்சவ  கொடி இறக்கப்படுகிறது.

.

மூலக்கதை