ஜார்கண்டில் 2 நக்சல்கள் சுட்டு கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜார்கண்டில் 2 நக்சல்கள் சுட்டு கொலை

ராஞ்சி: ஜார்கண்டில் 2 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜார்கண்டில் முதல்வர் ரகுவர்தாஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்கண்டில் உள்ள சிங்பும் பகுதியில் நக்சலைட்  தீவிரவாதிகள் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாகும்.

இங்கு நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் மற்றும் மாநில போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர்.

இதில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை  நடைபெற்றது.

இதில் 2 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை