வர்த்தக பெயர் பலகைகளில் தெலுங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை தாய்மொழி பாடம் கட்டாயம்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வர்த்தக பெயர் பலகைகளில் தெலுங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை தாய்மொழி பாடம் கட்டாயம்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி

ஐதராபாத்: அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை தாய்மொழி பாடம் கட்டாயம் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் சந்திரசேகரராவ் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல்  12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயப்பாடமாக்கப்பட  வேண்டும். இதை மேற்கொள்ளாத பள்ளிகள், கல்வி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.அதே போல் பள்ளி, கல்வி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்து பெயர் பலகைகளிலும் கட்டாயம்  தெலுங்கில் எழுதப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் டிசம்பர் 15 முதல் 19 வரை உலக தெலுங்கு மாநாடு நடத்துவதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதே  போல் தெலுங்கு சாகித்ய அகாடமியை மேம்படுத்த கூடுதலாக ரூ. 5 கோடியும், ஆட்சி மொழி கமிட்டியை செயல்படுத்த ரூ. 2 கோடியும் ஒதுக்கப்படும்  என்றார்.

.

மூலக்கதை