ஏமனில் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் வாடிகனில் தஞ்சம்: சுஷ்மா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏமனில் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் வாடிகனில் தஞ்சம்: சுஷ்மா தகவல்

புதுடெல்லி: ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் வாடிகனில் தஞ்சம் அடைந்துள்ளதாக சுஷ்மா தெரிவித்துள்ளார். ஏமனில் இருந்து கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்திய பாதிரியார் டாம் உழுநெல்லில் கடத்தி செல்லப்பட்டார். கடந்த ஓராண்டாக அவரை  மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழலில் நேற்று அவர் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை மத்திய அமைச்சர்  சுஷ்மாவும் உறுதி செய்துள்ளார்.இதுகுறித்து சுஷ்மா தனது டுவிட்டரில், மீட்கப்பட்ட பாதிரியார் டாம் உழுநெல்லில் வாடிகனுக்கு வந்தடைந்தார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.   முன்னதாக அதே டுவிட்டரில், பாதிரியார் டாம் மீட்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்றும் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமனில் 4 கன்னியாஸ்திரி உள்ளிட்ட 16 பேரை கொலை செய்து விட்டு பாதிரியார் டாம் உழுநெல்லிலை  தீவிரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான டாம் உழுநெல்லிலை விரைவில் இந்தியாவுக்கு  கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுஷ்மா டுவிட்டரில் உறுதி அளித்துள்ளார்.

.

மூலக்கதை