சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதா உயர்நீதிமன்றம்? – குருபரன் – சுமந்திரன் எதிர்வாதம்

என் தமிழ்  என் தமிழ்
சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதா உயர்நீதிமன்றம்? – குருபரன் – சுமந்திரன் எதிர்வாதம்

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கூற்றை சட்டத்தரணி குருபரன் நிராகரித்துள்ளார்.

உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், அதன் தீர்ப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் சட்டத்தரணி குருபரனின் கூற்றை எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். இதுபற்றி சுமந்திரன் தெரிவிக்கையில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கோரிக்கையொன்று முன்வைக்கப்படலாம் என உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை