19 ஆவது திருத்தத்தை சரியாகப் படித்துப் பாருங்கள்! – மகிந்தவுக்கு விஜித ஹேரத் அறிவுரை

என் தமிழ்  என் தமிழ்
19 ஆவது திருத்தத்தை சரியாகப் படித்துப் பாருங்கள்! – மகிந்தவுக்கு விஜித ஹேரத் அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு அரசியலமைப்பு தொடர்பான தெளிவு போதாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் லலித் வீரதுங்க என்பவர் அரச அதிகாரி என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்றும் அவரை நீதிமன்றம் தண்டிக்க முடியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ​தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திடம் கேள்வியெழுப்பியபோது, மஹிந்த ராஜபக்‌சவுக்கு அரசியல் அமைப்பு தொடர்பில் போதுமான தெளிவு இல்லை. 19ஆவது திருத்தச் சட்டம் அல்லது அதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த சட்டங்களின் பிரகாரம் லலித் வீரதுங்க அரச அதிகாரி என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படுகின்றார். அவ்வாறு இருந்த காரணத்தினால் தான் இன்னொரு அரச நிறுவனத்தின் பணத்தைக் கொ்ணடு சில் அனுட்டானத்திற்கான துணிகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட முடிந்தது.

எனவே குறித்த செயற்பாட்டில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அவர் தண்டிக்கப்படவேண்டியரேயாவார். அத்துடன் சில் அனுட்டானத்திற்கான துணிகளை விநியோகிக்க உத்தரவிட்டது தான் என்றும் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் மஹிந்த இப்போது கருத்து வௌியிடுகின்றார். அவ்வாறெனில் அது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது அவர் சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்றிருக்க வே்ண்டும். இப்போது அவ்வாறு கூறுவது வெறும் நாடகமேயன்றி வேறில்லை என்றும் விஜித ஹேரத் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை