தெ.ஆப்பிரிக்காவில் ட்விட்டர் உதவியுடன் தந்தையை கண்டுபிடித்த மகள்

தி இந்து  தி இந்து
தெ.ஆப்பிரிக்காவில் ட்விட்டர் உதவியுடன் தந்தையை கண்டுபிடித்த மகள்

தென் ஆப்பிரிக்காவில் ட்விட்டரின் உதவியுடன்  மகள் ஒருவர் அவரது தந்தையை கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள மின்ராண்ட் நகரைச் சேர்ந்த டலாமினி நகோசி என்ற பெண் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தனது தந்தையின் புகைப்படத்தை பதிவேற்றி, "நான் எனது தந்தையை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் அவரை சந்திக்க வேண்டும்.  இந்தப் பதிவை ரீட்வீட் செய்யுங்கள். அவர் உங்களுக்கு அப்பாகவும் இருப்பார்" என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து சுமார் 9,600 ரீட்விட்டுகள் அப்பதிவுக்கு கிடைத்தன. மேலும் அவரது தந்தையை கண்டுபிடிக்க சில உதவிகளை ட்விட்டர் வாசிகள் செய்தனர். இறுதியில் டலாமினி அவரது தந்தையை ட்விட்டர் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து டலாமினி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது ட்வீட்டை ரீட்வீட் செய்த அனைவருக்கும் நன்றி. நான் எனது தந்தையைக் கண்டுபிடித்துவிட்டேன். அவரை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். எனது தந்தையை காணும் நாளை எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் எதிர் கொண்டுள்ளது"  என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை