பச்சைக்குத்தும் இங்க்கில் உள்ள நுண்துகள்களால் நோய் தடுப்புச் சக்தி பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை

தி இந்து  தி இந்து
பச்சைக்குத்தும் இங்க்கில் உள்ள நுண்துகள்களால் நோய் தடுப்புச் சக்தி பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை

உடலில் சிலர் நிலையாக பச்சைக் குத்திக் கொள்வதுண்டு. இதனால் நோய் தடுப்புச் சக்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பச்சைக்குத்துவதற்குப் பயன்படும் இங்க்கில் நச்சு நுண் துகள்கள் இருப்பதால் அது உடலின் உள்ளே சென்று நிணநீர் முடிச்சுகளை பெரிதாக்கும் ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலன இங்க்குகளில் உயிர்ம நிறமிகள் உள்ளன. ஆனால் இதில் நிக்கல், குரோமியம், மாங்கனீஸ் அல்லது கோபால்ட் போன்ற நச்சுப்பொருட்களும் உள்ளன

பொதுவாகப் பயன்படுத்தப்படும் கார்பன் கருப்பு என்ற பொருளைத் தவிர டாட்டூ இங்க்குகளில் டைட்டானியம் டை ஆக்சைடும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவுப்பொருட்க்ள், சன்ஸ்க்ரீர்ன் லோஷன்கள், மற்றும் பெயிண்ட்களிலும் பயன்படுத்தப்படக் கூடியது.

டாட்டூவினால் ஏற்படும் தீங்குகள் அதனை ரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பிறகே தெரியவருகிறது. ஜெர்மனியில் உள்ள ஐரோப்பிய சிங்க்ரோட்ரான் கதிர்வீச்சு சோதனைச் சாலையில் எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் டாட்டூ இங்க்குகளில் டைட்டானியம் டையாக்சைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித தோலில் இதன் நுண் துகள்கள் பல மைக்ரோ மீட்டர்கள் அளவுக்கு உள்ளதும், இதில் நுண் துகள்கள் நிணநீர் முடிச்சுகளுக்குச் செல்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நுண் துகள்களா நிண நீர் முடிச்சுகள் பெரிதாகிவிடுகின்றன, நீண்ட கால பிரச்சினையாக இது உருவெடுத்து உடலின் நோய் தடுப்புச் சக்திகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

“டாட்டூக்களின் நிறமிக்ள் நிணநீர் முடிச்சுகள் வரை செல்வது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், இது காட்சி ரீதியாகவே நிரூபணமானது. நிணநீர் முடிச்சுகள் டாட்டூவின் நிறத்துக்கு மாறுகிறது, அதாவது உடலுக்குள் டாட்டூ நுண் துகள் நுழைவதற்கான ஒரு செயலாக இது அமைகிறது, என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த அய்வு சயண்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

மூலக்கதை