இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு மோடி வரவேற்பு!

விகடன்  விகடன்
இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு மோடி வரவேற்பு!

இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. 


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையத்துக்கு ஷின்சோ அபே, அவருடைய மனைவி அகி அபேவுடன் வந்திறங்கினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர், அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து மோடி மற்றும் ஷின்சோ அபே இணைந்து சாலை வழியாக ஊர்வலமாக காந்தி ஆஸ்ரமத்துக்குச் சென்றனர். சாலை முழுவதும் அவர்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்பின்னர் அங்கிருந்து 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று ரீதியாக சிறப்பு பெற்ற 'சிதி சையது நி ஜாலி' மசூதிக்கு செல்லவுள்ளார். நாளை மும்பை முதல் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் திட்டத்துக்கு இரு பிரதமர்களும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். ஜப்பான் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மூலக்கதை